Sunday, November 30, 2008

வாரணம் ஆயிரம்


அப்பா சென்டிமெண்ட் படம். அப்பாவைப் பெரிதும் மதிக்கும் என்னால் இந்தப் படத்தின் கருவுடன் 'கனெக்ட்' செய்ய இயலவில்லை. 

படம் முதலிலிருந்து கடைசி வரை மிகவும் மெதுவாக நகர்கிறது. அப்பா செத்துப் போவதை தேவையில்லாமல் ரொம்ப நேரம் காட்டுகிறார்கள்.

சூர்யா இரட்டை வேடத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் படி இல்லாமல் எல்லா இடத்திலும் நன்றாக நடித்திருக்கிறார். சிம்ரன் அம்மா வேஷத்திற்குப் பொருத்தமாக் இருக்கிறார்.

ரயிலில் மேகனாவிடம் வழிவது, மேகனாவின் வீட்டுக்குப் போய் வழிவது - இந்தக் காட்சிகள் நன்கு படமாக்கப் பட்டிருக்கின்றன. இயல்பான நடிப்பு. புதிய தலைமுறை பெண்கள் 'காதலுக்கு' கொடுக்கும் சராசரி 'ரியாக்ஷன்' இதுதான் என்றால் இந்தத் தலைமுறையின் எதிர்நோக்குச் சிந்தனையைப் பாராட்டலாம். 

அமெரிக்கக் காட்சிகளில் படப்பிடிப்பு நன்றாக அமைந்திருந்தது. அதே போல அந்தக் காலத்து சென்னையை காட்டுவதை மிகக் குறைவாக செட் போட்டு காமிரா கோணங்களை வைத்தே முயன்று ஏறக்குறைய வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

வாரணம் ஆயிரம் என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்று படம் எடுத்தவர்களுக்கே புரியவில்லை போலும். கடைசிக் காட்சியில் சிம்ரனை விட்டு சப்பைக் கட்டு கட்டச் சொல்லி விட்டார்கள்.

'பில்ட் அப்' கொடுத்திருக்கும் அளவுக்கு சுவாரசியம் இல்லை. ரசிகர்கள் திரையரங்கில் நக்கலா பாரட்டா என்று புரியாத வகையில் படம் முழுவதும் கத்திக் கொண்டே இருந்தார்கள்.

3 comments:

கோவி.கண்ணன் said...

//சிம்ரன் அம்மா வேஷத்திற்குப் பொருத்தமாக் இருக்கிறார்.//

சிம்ரன் ரசிகர்கள் கொதித்து போவார்கள்.
:)

அரவிந்த் said...

\\ரசிகர்கள் திரையரங்கில் நக்கலா பாரட்டா என்று புரியாத வகையில் படம் முழுவதும் கத்திக் கொண்டே இருந்தார்கள்.\\

உங்களுக்கு ரொம்பத்தான் குறும்பு சார்..

Jackiesekar said...

அமெரிக்கக் காட்சிகளில் படப்பிடிப்பு நன்றாக அமைந்திருந்தது. அதே போல அந்தக் காலத்து சென்னையை காட்டுவதை மிகக் குறைவாக செட் போட்டு காமிரா கோணங்களை வைத்தே முயன்று ஏறக்குறைய வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

அப்பா பாராட்டிட்டிங்க

Blog Archive