Friday, October 10, 2008

சக்கரம் இல்லாமல் சாகசம்

ஏர்பஸ் 320 ரக விமானம் ஒன்று நேற்று முன் தினம் மும்பையிலிருந்து டெல்லி செல்லும் போது ஒரு முன் சக்கரத்தை ஓடு தளத்திலேயே விட்டு விட்டுப் பறந்து போயிருக்கிறது. அடுத்தாற்போல ஓடுதளத்தை உபயோகித்த உஷாரான விமானி ஒருவர் சக்கரத்தைப் பார்த்து விட்டுத் தகவல் கொடுக்கவே பெரிய ஆபத்திலிருந்து முதல் விமானம் தப்பி விட்டது.

டில்லி வரை சாதரணமாகப் பறந்து சென்று, தரைஇறங்கு முன் கட்டுப்பாட்டு கோபுரத்தின் அருகே தாழப்பறந்து சக்கரம் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு பிறகு முன்னால் அமர்த்திருந்த பல பயணிகளை விமானத்தின் பின் புறத்தில் அமர்த்தி, பின் பாரத்தை அதிகப் படுத்தி, பொத்தினார் போல பத்திரமாக தரை இறக்கி விட்டார்கள்.

இதுவே முதல் முறை ஓடு தளத்தை தொடும் அளவிற்கு இறங்கியும் தரையைத் தொடாமல் மேலேறி சுமார் ஒரு மணி நேரம் பறந்த பின்னரே இரண்டாம் முறை தரையைத் தொட்டிருக்கிறார்கள்.

சுமார் 123 பயணிகளின் ஆயுசு கெட்டியாக இருந்திருக்கிறது. வேறு என்ன சொல்ல?

2 comments:

மாயவரத்தான் said...

ஏற்கனவே பஞ்சர் ஒட்ட வீலை கழட்டிட்டு திரும்ப மாட்டும் போது நட்டை முடுக்க மறந்திருப்பாங்க. வேறென்னா? விசாரணைக் குழு முடிவு இப்படி தானே இருக்கும்?!

Mahesh said...

நல்ல வேளை சக்கரத்த விட்டுட்டு பறந்து போச்சு... பைலட்டயே விட்டுட்டு போனாலும் போவாங்க... :)

Blog Archive