Sunday, September 03, 2006

குருத்து திசுள் (Stem Cell) ஆராய்ச்சியில் முன்னேற்றம்

குருத்துத் திசுள் பற்றிய அடிப்படைச் செய்திகளை முன்னொரு இடுகையில் சொல்லியிருந்தேன்.

முன்பு குருத்துத் திசுள்களைத் தயாரிக்க சினை முட்டையை அழிக்க வேண்டியிருந்தது. இது உயிர் கொலைக்குச் சமானம் என்று பல உலக அமைப்புகள் குரல் எழுப்பி இத்தகைய ஆராய்ச்சிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஒரு படி முன்னேறி, சினை முட்டையை அழிக்காமல் அதிலிருந்து ஒரே ஒரு திசுளை வெளியே எடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்கள்.

ஆனாலும் இதை எதிர்க்கும் அமைப்புகள் ஒரு திசுளானாலும் அது ஒரு உயிரே என்று ஒரு புதிய வாதத்தை எடுத்து வைத்து இந்த ஆராய்ச்சிக்கு மற்றோரு புதிய கட்டையைக் கொடுத்திருக்கிறார்கள்.

1 comment:

Babu said...

உலகின் எல்லா அரிய கண்டுபிடிப்புகல் எல்லாம் ஆரம்பதில் எதிர்க்கப்பட்டவயே, முடிவில் திடமான ஆராய்ச்சி வெல்லும்,

ஸ்டெம் செல் வளர்ச்சியை தடை செய்ய நினைப்பவர்கள், அதை ஒரு ஆராய்ச்சியாய் பார்க்காமல், மனித இனத்தின் வளர்ச்சியை பொருக்க மாட்டதவர்கள்
நிச்சயம் ஒரு நாள் இத்தகய, ஆராயிச்ச்யின் முக்கியதுவத்தை உணர்வார்கள்
பயனுல்ல இன்பர்மேஷன்
பாபு

Blog Archive