அமெரிக்காவில் டாக்டர் படிப்பு படித்து விட்டு அங்கேயே வாழும் இந்தியர்களான இரண்டு சங்கிலித் தொடர் கொலைகாரர்களை கமல் துப்பறிந்து பிடிக்கும் கதை.
அந்தக் கொலைகாரர்கள் இந்தியாவில் படித்த போது அவர்களை அவமானப் படுத்திய பெண்ணையும், பிறகு அந்தப் பெண்ணின் போலீஸ் உயர் அதிகாரியான தந்தையையும் (தாயையும் கூட) போட்டுத் தள்ளுவதால், இந்திய அரசு கமலை துப்பறிவதற்காக அமெரிக்கா அனுப்பி வைக்கிறது.
அமெரிக்காவிற்கு விமானத்தில் பறக்கும் போதுதான் ராகவன் (கமல்) மனைவி சில எதிரிகளால் கடத்திக் கொல்லப் பட்ட ·ப்ளாஷ் பேக். இங்கே வரும் ஒரு பாடல் கேட்க நன்றாயிருந்தது. இந்த ·ப்ளாஷ் பேக்கில்தான் கமலுக்கும் கொல்லப்பட்ட மற்ற போலீஸ் அதிகாரிக்கும் உள்ள பிணைப்பு சித்தரிக்கப் படுகிறது.
கமலின் போலீஸ் உள்ளுணர்வு நன்றாகத் திரையில் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கப் போலீஸ் காரர்களை இவ்வளவு முட்டாள்களாகச் சித்தரித்திருப்பது சரியில்லை.
சாலை விதிகளை மீறுபவர்களைப் பிடிப்பதிலேயே மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல் படும் அமெரிக்கப் போலீஸ் இரண்டு தொடர் கொலைகாரர்களைப் பிடிக்கப் போகும் போது குருவி சுடுவது போல சுடப் பட்டு செத்துப் போகிறார்கள். அவர்கள் செத்துப் போன விஷயம் மட்டும் அமெரிக்கப் போலீஸ¤க்கு உடனே கிடைக்கிறது. அவர்கள் தடயங்களை ஆராயவில்லை. கொலையாளிகளைத் தேடிப் பிடிக்கவில்லை. விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் கமல் தரையிறங்கக் காத்திருந்து அவரிடம் சொல்கிறார்கள் (!?!).
அதே போல கொலைகாரர்கள் இன்னொரு அமெரிக்கப் போலீஸ் காரரைச் சுட்டு நெருப்பில் பொசுக்கி விட்டு இந்தியாவிற்குத் தப்பிச் சென்று விட்ட பிறகும், கமல் போய் இந்தியாவில் அவர்களைத் தேடிப் பிடித்துக் கொல்லட்டும் என்று தேமேயிருக்கிறார்கள்.
போகும் போது விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்யும் கமல், வரும் போது முதல் வகுப்பில் வருகிறார்.
மணமான கமலுக்கும் மணமான ஜோதிகாவிற்கும் காதல் வருவது கொலைகாரர்களைத் தேடும் விறுவிறுப்பிற்கு நடுவே ஆமை வேகத்தில் சொல்லப் படுகிறது. இங்கே நமக்கு போர் அடிக்கிறது.
படம் முடிந்த பின் பக்கத்து சீட்டில் இருந்தவர்கள், "காமெடி டிராக்கே இல்லையே" என்று அங்கலாய்த்த போதுதான் நமக்கு உரைத்தது.
பல இடங்களில் அமெரிக்கர்களுடன் கமல் ஆங்கிலத்தில் உரையாடுவதை திரைக்குக் கீழே எழுத்துப் போட்டுத் தமிழில் காட்டியிருக்கிறார்கள். படிக்கத் தெரியாத உங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்ணுக்குப் புரியவா போகிறது?
மொத்தத்தில் ஒரு கமல் மசாலா படம். அமெரிக்கக் காட்சிகளுக்காகவும், சில பாடல்களுக்காகவும், கற்பழிப்புக் காட்சிகளுக்காகவும், போலீஸ் விறுவிறுப்புக்காகவும் சில நாள் ஒடலாம்.
No comments:
Post a Comment