Thursday, June 09, 2005

ப்ரிக் (BRIC) பொருளாதாரம்

நன்றி: கோல்ட்மன் ஸாக்ஸ் (சுட்டிகள் கீழே)

ப்ரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா (BRIC) பொருளாதாரங்கள், உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சக்தியாக உருவாகக் கூடும்.

G6 நாடுகளான அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஜப்பான், இத்தாலி, ·பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் பொருளாதார அளவில் பாதியை ப்ரிக் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டு எட்டும்.

இன்னும் சுமார் 40 ஆண்டுகளில், ப்ரிக் பொருளாதாரம் G6 நாடுகளின் பொருளாதாரத்தை மிஞ்சக் கூடும்.

டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2050 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு 2.5 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்த வண்ணம் இருக்கக் கூடும். இந்தக் கணக்கில் 2050 ஆம் ஆண்டு 14 இந்திய ரூபாய்களுக்கு 1 அமெரிக்க டாலர் கிடைக்கும்.

ப்ரிக் நாடுகளிலேயே இந்தியாவில்தான் 2050 களில் வேலை செய்யும் வயதில் இருப்பவர்கள் (15 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டோர்) மிகவும் அதிகமாக இருக்கப் போகிறார்கள். சீனாவில் இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கும்.

50 வருடங்களுக்குப் பிறகும் ஏழ்மையில் முதலிடம் இந்தியாவிற்குத்தான்.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GDP) 2040 ஆம் ஆண்டின் வாக்கில் அமெரிக்காவை மிஞ்சக் கூடும். 2016 ஆம் ஆண்டில் சீனா ஜப்பானை பொருளாதார அளவில் மிஞ்சி விடும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இந்தியா ஜப்பானின் பொருளாதார அளவை 2035 ஆம் ஆண்டு வாக்கில் மிஞ்சக் கூடும்.

மிக வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியங்கள் இந்தியாவில்தான் தெரிகிறது.

இருப்பினும், இன்றைய தேதியில் ப்ரிக் நாடுகள் நிலையை அலசிப் பார்த்தோமானால்:

  • அடிப்படை கட்டமைப்பு ஆதாரங்களில் (சாலைகள், சக்தி ஆதாரங்கள்) இந்தியா மிகப் பின்தங்கியிருக்கிறது
  • குறிப்பாக தகவல் பரிமாற்றம், மற்றும் தொலை தொடர்பு கட்டமைப்புகளில் மிகவும் பின் தங்கி இருக்கிறோம்
  • அமெரிக்காவில் ஒவ்வொரு 1000 பேரிலும் 192 பேர் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் பெற்றவர்கள். ரஷ்யாவில் 1000 த்தில் 125 பேரும், ப்ரேசிலில் 30 பேரும், இந்தியாவிலும் சீனாவிலும் சுமார் 15 பேரும் பட்டம் பெற்றவர்கள்
  • ப்ரேசிலிலும் ரஷ்யாவிலும் நகரங்களில் வாழும் மக்கள் எண்ணிக்கை அதிகம். இந்தியாவும் சீனாவும் இதற்கு நேர்மாறான நிலையைக் கொண்டிருக்கின்றன
  • ஆரோக்கியத்திற்காக செலவிடப் படும் பணத்தின் அளவில் சிக்கனத்தில் சிறந்தது இந்தியா. ப்ரேசிலும், ரஷ்யாவும் பெருமளவில் மனித ஆரோக்கியத்திற்காக செலவிடுகின்றன
  • எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விகிதம் ரஷ்யாவில் மிக அதிகம். சீனாவும் ப்ரேசிலும் இந்த விகிதத்தில் சரி நிகர் என்றாலும் மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும் போது சீனாவில் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் எண்ணிக்கை ப்ரிக் நாடுகளிலேயே மிக அதிகம். இந்தியா இந்த விகிதத்தில் மிகப் பின்தங்கியுள்ளது
மேலும் விபரங்களுக்கு கோல்ட்மன் ஸாக்ஸ் நிறுவனத்தின் இணைய தளத்தில் இருக்கும் இரண்டு ஆய்வறிக்கைகளைப் படிக்கவும். சுட்டிகள் கீழே:

1.
ஆய்வறிக்கை எண் 99

2.
BRIC Layers Issue No 05/03

No comments:

Blog Archive