Friday, June 10, 2005

ராணியின் பிறந்த நாள் பரிசு...

ஹிந்துவில் போரில் வென்று வந்த வீரர்கள் மன்னனிடம் பரிசு கேட்ட கதை போட்டிருந்தார்கள். என்க்கு உடனே இந்தக் கதை நினைவுக்கு வந்தது.

ஒரு ராணிக்குப் பிறந்த நாள். அவளுக்குப் பரிசு கொடுக்க வரிசையில் பலர் நின்றிருந்தார்கள். அவரவர் வசதிக்குத் தக்கபடி ரத்தினக் கம்பளம், பட்டாடை, முத்து, மணி என்று ஒவ்வொருவரும் ஒரு வகைப் பரிசோடு ராணியைப் பார்க்க நின்று கொண்டிருந்தனர்.

ஒரு ஏழை விவசாயியும் ராணிக்கு அன்புடன் பரிசு கொண்டு வந்திருந்தான். அவன் கையில் இருந்தது அவன் தோட்டதில் விளைந்த வாழைப்பழம்.

வரிசையில் நகர்ந்து வந்து ராணியிடம் அந்த வாழைப்பழத்தைக் கொடுத்து வாழ்த்துச் சொன்னான் விவசாயி.

ராணிக்கு தன் தகுதிக்கு வாழைப்பழப் பரிசு அவமானமாகத் தோன்றியது.

கோபம் வந்து காவலர்களிடம், "இந்த வாழைப் பழத்தை இவனுக்குப் பின்னால் ஏற்றி விடுங்கள். இவனுக்கு அப்படியாவது புத்தி வரட்டும்" என்று ஆணையிட்டாள்.

விவசாயி அதிர்ந்து போனான். ஆனால் அடுத்த கணமே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

ராணிக்கு ஒன்றும் புரியவில்லை. "உனக்குத் தண்டனை கொடுத்த் பிறகும் எவ்வளவு திமிர் இருந்தால் இப்படிச் சிரிப்பாய்" என்று கோபமாகக் கேட்டாள்.

அதற்கு விவசாயி சொன்னான்: "ராணி! எனக்காவது பரவாயில்லை. வாழைப்பழம். எனக்குப் பின்னால் பலாப் பழத்துடன் ஒருவன் வரிசையில் நின்று கொண்டிருந்தான். அவன் நிலையை நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்து விட்டது"

No comments:

Blog Archive