Friday, May 13, 2005

சிந்து பாடலாமா கூடாதா?

இந்திய உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு நேற்று வரை நிலுவையிலிருந்து நேற்றுத்தான் தீர்ப்புச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த வழக்கு இந்திய தேசிய கீதத்திலுள்ள வார்த்தைகள் பற்றியது.

இந்த வழக்கைத் தொடர்ந்தவர், சிந்து மாகாணம் பாகிஸ்தானைச் சேர்ந்து விட்ட பிறகு அதன் பெயரை "பஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா" என்று இந்திய தேசிய கீதத்தில் இசைப்பது முறையல்ல என்று வாதாடினார். சிந்து என்ற சொல் தேசிய கீதத்தில் இருந்து நீக்கப் பட வேண்டும் என்பது இவரது கோரிக்கை மற்றும் வழக்கின் நோக்கம்.

இந்திய அரசு "சிந்து" என்ற சொல் தேசிய கீதத்தில் ஒரு இடத்தைக் குறிக்கும் சொல்லாக அமைக்கப்படவில்லை அது ஒரு கலாச்சாரத்தை அல்லது நாகரிகத்தைக் குறிக்கிறது என்று சுட்டிக் காட்டி வாதாடியது.

நேற்று நாட்டின் இந்த வெகு முக்கியப் பிரச்சினையில், வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து விட்டார்கள்.

4 comments:

dondu(#11168674346665545885) said...

"நேற்று நாட்டின் இந்த வெகு முக்கியப் பிரச்சினையில், வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து விட்டார்கள்."
அதாவது சந்துல சிந்து பாடாத என்று நீதிமன்றம் கூறிவிட்டது என்று வைத்துக் கொள்வோமா?

ந. உதயகுமார் said...

:0))

மாயவரத்தான் said...

'ஜனகனமண'வை ஒழுங்கா பாட தெரியாமத்தான் முக்காவாசிப்பேரு இருக்காங்க நாட்டிலே.. ! இதிலே இந்த மாதிரி கேஸ் போட்டு கோர்ட்டோட நேரத்தை வீணடிச்சவருக்கு fine போட்டது தப்பில்லே தான்!

ந. உதயகுமார் said...

பாடத் தெரிவது ஒரு புறம் இருக்கட்டும். தேசிய கீதம் பாடப் படும் போது இன்று எத்தனை பேர் எழுந்து நின்று அமைதி காக்கிறார்கள். பள்ளிக் குழந்தைகள் படித்த பெரியவர்களே தேசிய கீதத்தையும் கொடியையும் மதிக்காத செயலைப் பார்த்து எரிச்சலடைவதையும், அவர்களைக் கேள்வி கேட்டதையும் நான் பார்த்திருக்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடுவதென்றாலே செலவு சற்று ஆகத்தான் செய்யும். இதில் வழக்குப் போட்டவருக்கு அபராதம் வேறு விதித்தார்கள் என்பது எனக்கு இதுவரை தெரியாத ஒரு செய்தி. உச்சநீதி மன்றம் இப்போதெல்லாம் வேண்டிய போது குச்சியைக் கையிலெடுக்கத் தயங்குவதில்லை! அது வரவேற்கத் தக்கது.

Blog Archive