Friday, May 06, 2005

பாசில்லஸ் துரிஞ்ஜியன்சிஸ்

இது (Bacillus Thuringiensis) ஒரு மண்வகை நுண்ணுயிர் (soil bacteria). இது குட்டி போட்டு பால் கொடுக்கும் (mammal) உயிரினங்களுக்குத் தீங்கிழைக்காது. மனித இனம் உட்பட...

ஆனால் பயிர்களைத் தாக்கும் புழுப் பூச்சிகளுக்கு இந்த நுண்ணுயிர் ஆபத்தானது. அவற்றைச் செயலற்றுப் போக வைக்கும் நச்சுத் தன்மை (toxic) கொண்டது.

உயிரித் தொழில்நுட்பம் (Bio-Technology) மூலம் பருத்திச் செடியின் மரபுக் கூற்றுகளில் ஒரு செடி வளரும் போது அதன் உடல் முழுவதும் இந்த நுண்ணுயிர் உருவாகும் வகையில் அமைத்தார்கள்.

பருத்திச் செடியைத் தாக்கும் "போல் புழுக்களை (bollworm)" இந்த நுண்ணுயிர்கள் செயலற்றுப் போக வைத்ததால் பருத்தி விளைச்சல் அமோகமாக வளர்ந்தது. இப்போது இந்த நுண்ணுயிர்களை மரபில் கொண்ட பருத்தி விதைகள் பிரபலம். இதை Bt பருத்தி விதைகள் என்று அழைக்கிறார்கள்.

இந்த வெற்றிக்குப் பிறகு Bt ஸோயா, Bt உருளைக்கிழங்கு. Bt சோளம் என்று பட்டியல் வளர்ந்திருக்கிறது. இந்த வகையில் பூச்சிகளை தானே எதிர்த்து, அமோக விளைச்சலைக் கொடுக்கும் பயிர் வகைகளை ·பிராங்கின்ஸ்டைன் (frankinstein) பயிர்கள் என்றும் அழைக்கிறார்கள்.

விவசாயிக்கு லாபம் பெருக்கக் கூடிய இந்த தொழில் நுட்பம் பொருந்திய பயிர்வகைகள் மேல் மனிதர்களுக்குள்ள சந்தேகம் இன்னும் முழுமையாக நீங்க்வில்லை.

இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பின் அமெரிக்காவில் பருத்தி விளைச்சலின் வளர்ச்சி கூடிக் கொண்டே போகிறது.

ஆங்கில, கணித, மென்பொருள் செய்யும் திறமையால் உலகைக் கவர்ந்திருக்கும் நாம் சாப்பாட்டுப் பிரியர்களும் கூடத்தான். ஆகவே இந்தத் துறையிலும் Bt தக்காளி, Bt கத்தரிக்காய், Bt அரைக் கீரையெல்லாம் ஏன் செய்யக் கூடாது?

No comments:

Blog Archive