ஜெயா டி.வி. யில் இன்று மதியம் ஒரு தமிழ்ப் படம் போட்டார்கள். 2000 அல்லது 2001 ஆம் ஆண்டு வாக்கில் வெளி வந்த படம். மணிரத்னம் தயாரித்திருக்கிறார்.
கண்ணம்மா என்ற பத்து வயது சிறுமியின் வாழ்க்கையைச் சுற்றி அமைக்கப் பட்ட கதை. அப்பா இறந்து போனதால் அம்மாவால் சென்னைக்கு வீட்டு வேலைக்கு அனுப்பப் ப்டுகிறாள் கண்ணம்மா. ஒரு இளம் தம்பதிகள் வீட்டில் வேலைக்குச் சேர்கிறாள். இருவரும் வேலைக்குச் செல்கிறவர்கள். அவர்கள் கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள கண்ணம்மா. கணவனின் அம்மா கூட வசிக்கிறார்.
கண்ணம்மாவை அங்கு "குட்டி" என்றே எல்லோரும் அழைக்கிறார்கள். தம்பதிகள் கண்ணம்மாவிடம் அன்பு காட்டிய போதிலும் அம்மா இரக்கமே இல்லாமல் குட்டியைப் பட்டினி போட்டு வேலை வாங்குகிறார். சில சமயம் சூடு வைக்கிறார்.
கொடுமை தாங்காமல் குட்டி ஒரு நாள் காலை வீட்டை விட்டு ஒடும் போது ஒரு தெருப் பொறுக்கி அவளை அவள் அம்மாவிடம் சேர்ப்பதாக ஆசை காட்டி ஒரு மும்பை கும்பலிடம் விற்று விடுகிறான். குழந்தை "குட்டி" அம்மாவிடம் போகப் போவதாக நினைத்துக் கொண்டு குஷியாக ரயிலில் மும்பைக் கும்பலுடன் செல்கிறாள்.
"குட்டி" யாக நடித்த குழந்தை ஷ்வேதா உட்பட படத்தில் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள்;
பெண்களுக்குச் சமூகமும், அதற்கும் மேலாகப் பெண்குலத்தைச் சேர்ந்தவர்களுமே ஏதோ சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டு இழைக்கும் கொடுமைகளை இந்தப் படம் சித்தரித்தது.
வீச்சரிவாளையும், அரைகுறைக் காதலையும் நூறு நாள் ஒட்டி ரசிக்கும் "ஜனரஞ்சகப் பிரியர்களான" தமிழ் மக்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக 2 நாளில் பெட்டிக்குள் அனுப்பியிருப்பார்கள். அதனால்தான் வந்த சுவடே தெரியாமல் போயிருக்கிறது இந்தப் படம்.
"குட்டி" போன்ற படங்கள் 100 நாளைத் தாண்டி ஒடும் போதுதான் இந்தியாவை முன்னேறிய நாடுகள் பட்டியலில் சேர்க்க முடியும்.
7 comments:
நிச்சயமாக இது அருமையான படம். இப்படத்தை ஜானகி விஸ்வநாதன் ('கனவு மெய்ப்பட வேண்டும்' இயக்கியவர்) இயக்கியிருந்தார். ஆனால் நீங்கள் சொல்வது போல் மணிரத்தினம் தான் தயாரித்தாரா என்று தெரியாது. நாசர், ஈஸ்வரிராவ், கௌசல்யா என அனைவரும் சிறப்பாக நடித்த படம். தங்கர் பச்சானின் கமராக் கோணங்கள் கூட கதைபேசியது. இப்படம் பற்றிய கறுப்பியின் முக்கியமான விமர்சனமொன்று தமிழ்பிலிம் கிழப்பில் உள்ளது. சுட்டி கிடைத்தால் பதிகிறேன். அருந்தலாய் பெண் இயக்குநர்கள் வந்தாலும் முத்தான படங்களையே தருகிறார்கள். இன்னொரு உதாரணம் ரேவதி.
FYI,The girl won national award for best child artist for that year..The climax song sung by Isai Gnani ilayaraja made me couldn't control my tears.One of the best movies made in tamil.
இந்தக் கதையை எழுதிய 'சிவசங்கரி'யை மறந்துட்டீங்களா?
மன்னிக்கவும். தமிழ் பிலிம் கிளப்பில் குட்டி பற்றி எழுதியது சந்திரவதனா. இதோ இணைப்பு.
http://www.thamilfilmclub.com/forum/viewtopic.php?t=42
நல்ல படம்
அன்புள்ள வசந்தன், ஜோ, துளசி கோபால், கங்கா. தங்கள் கருத்துக்களை இப் பதிவில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வேலை நிமித்தமாக பயணம் செய்த படியால் முன்னதாக எழுத இயலவில்லை. மன்னிக்கவும். -உதயகுமார்.
நெங்சைத்தொட்ட படங்களில் ஒன்று.
சில நாட்களுக்கு முன்னால் குட்டி - பார்ட் 2 என்று பம்பாய் சென்ற பின் ஏற்படும் நிகழ்வுகளை கோர்க்கப்படும் படம் வரப்போவதாக செய்தி வெளியாகியது. பின்னர் தான் தெரிந்தது - அது வெறுமனே பார்வயாளர்களின் ஆதங்கம் தான் என்று.
Post a Comment