
கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தவே 45 நிமிடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். கதை என்று ஒன்று இந்தப் படத்தில் இருக்கப் போகிறதா என்று கவலைப் பட ஆரம்பித்து விடுகிறோம் நாம். கடைசி கதாபாத்திரமாக இன்ஸ்பெக்டர் இடைவேளைப் பக்கம்தான் படத்தில் வருகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..
கதாநாயகனுடன் வரும் இரண்டு நண்பர்கள் அடிக்கும் லூட்டி இருக்கும் போது எம் எஸ் பாஸ்கர், கருணா டிராக் எதற்கு என்று இன்னமும் புரியாமல் கிடக்கிறோம்.
கதாநாயகி ஒவ்வோரு கோணத்தில் அசினை நினைவூட்டுகிறார். நடனமாடும் போது சில சமயம் அசின் மாதிரி ஆடுகிறார் என்று எனக்குத் தோன்றியது..
படத்தில் எழுத்துப் போட்டவுடன் முதல் ஆளாக வெளியே ஓடி வந்து விட்டேன் (குடும்பத்துடன் போனதால் நடுவே ஓட இயலவில்லை). மற்றபடி சொல்லிக் கொள்ளும் படியாக் எதுவும் இல்லை. கொஞ்ச நாளில் சன் ம்யூஸிக் சானலில் பாட்டுகளையும் காமெடி காட்சிகளையும் பார்த்து விடலாம். மற்றதற்கெல்லாம் காசு கொடுத்துப் பார்ப்பது தேவையற்ற விஷயம்.
கல்பாத்தி சகோதரர்கள் முதலில் கணினிப் பயிற்சி கொடுத்தார்கள். பிறகு ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்தார்கள். இப்போது திரைப்படம் தயாரிக்க இறங்கியிருக்கிறார்கள்.
2 comments:
அப்படின்னா,
"திரைக்கு வந்து சில மாதங்களே ஆன.."
என்று சன் டிவியில் வரும்போது பார்த்துக்கலாம்.
சகாதேவன்
"படத்தில் எழுத்துப் போட்டவுடன் முதல் ஆளாக வெளியே ஓடி வந்து விட்டேன் (குடும்பத்துடன் போனதால் நடுவே ஓட இயலவில்லை)"
:-)))))))))))))))))))))
Post a Comment