Wednesday, December 17, 2008

ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது சரியா?

நேற்று முழுவதும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் 'எண்ணெய் கூட்டாளிகள் சதி!! உற்பத்தியைக் குறைக்கத் திட்டம்? எண்ணெய் விலை திரும்பவும் உயரப் போகிறது !!!' என்ற கூச்சல்.

பீப்பாய்க்கு $147 ஐ தொட்ட எண்ணெய் விலை இன்று $43 இல் வந்து நிற்கிறது. இந்த விலை குறைவிற்கு முக்கியக் காரணம் சந்தையில் எண்ணெய் வாங்குபவர்கள் தேவை குறைந்திருப்பதால்தான். தேவை குறைவதற்கு நாம் யூகிக்கக் கூடிய காரணங்கள் இரண்டு
  1. விலை ஏறிய போது இன்னமும் ஏறப் போகிறது என்று மேலதிக விலை கொடுத்து தேவைக்கு அதிகமாக வாங்கிப் பதுக்கியவர்கள், சேமிப்பில் இருக்கும் உபரி எண்ணெயை உபயோகிக்கிறார்கள்
  2. வளர்ந்த நாடுகள் பொருளாதாரச் சரிவையும், வளரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சித் தேக்கத்தையும் சந்ந்தித்து வருவதால், முன்னேற்பாடாக பல தொழில் துறைத் தலைவர்கள் இடுப்பு நாடாவை இறுக்கிக் கட்டிக் கொண்டு விட்டனர். இவர்கள் உற்பத்தியைக் குறைத்ததால் எரிபொருள் தேவையும் குறைந்து விட்டது
ஆகவே சந்தையில் எரிபொருளுக்கான தேவை விலையை நிர்ணயிக்கிறது. தேவையற்ற எண்ணெயை சேமித்துக் காக்க வேண்டியது ஓபெக் நாடுகளுக்கு மேலும் சுமை.

பொருளாதாரச் சரிவுகளில் இருந்து உலகம் மீள ஆறு காலண்டுகளுக்கு மேலும் ஆகக் கூடும் என்று தெரிகிறது. ஆக உற்பத்தியைக் குறைப்பதில் நியாயங்கள் இருப்பது நமக்குப் புலப்படுகிறது.

No comments:

Blog Archive