- மத்திய ரிசர்வ் வங்கி சில மாதத்திற்கு முன்பு பணப் வீக்கத்தைக் கட்டுப் படுத்துகிறேன் பேர்வழி என்று புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். கட்டுப்பாடுகளை இப்போழுதுதான் தளர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
- அரசுக்கு வரி முன்பணம் கட்டவேண்டிய தவணை கட்டாயத்தால் நிறுவனங்கள் பணத்தை அதற்காக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
- நமக்கு எண்ணெய் விற்பவன் ஒரு மடங்கிற்கு இரு மடங்காக பீப்பாய் விலையை காரணமில்லாமல் உயர்த்தி எக்கச் சக்கப் பணத்தை சுரண்டிக் கொண்டு போய் விட்டான்.
- வங்கிகளில் பணம் போட்டவர்களெல்லாம், அமெரிக்க வங்கிகள் பற்றிப் பத்திரிக்கைச் செய்தி பார்த்தவரும் அடுத்தவர் சொல் கேட்டவரும், அலறி அடித்துக் கொண்டு தங்கள் வங்கிச் சேமிப்புக்களை வேறு பத்திரமான இடம் சேர்க்கிறார்கள். தங்கத்தின் விலை உயருவதைப் பார்க்கும் போது பெரும் பணம் அங்கே முடங்குவது புலப்படுகிறது.
வங்கிகளில் வைப்புக் குறைந்தால் அவர்கள் கடன் கொடுக்கக் கூடிய திறனும் குறையும். தம்மிடம் இருக்கும் வைப்பில் சுமார் 60 சதம் வரையே அவர்களால் கடன் கொடுக்க முடியும். ஆகவே பணப் புழக்க நெருக்கடி இந்தியாவில் இருக்கவே செய்கிறது.
மின் பற்றாக்குறை இருக்கும் நாட்டில் பணப் பற்றாக் குறையும் சேர்ந்து கொண்டிருக்கும் வேளையில் நிதி அமைச்சர் பொருளாதாரம் கண்டிப்பாக 8 சதவிகிதத்திற்கும் மேல் வளரும் என்று இன்னமும் படம் காட்டுகிறார்.
இன்று படித்த சுவையான செய்திகள் என்னவென்றால்:
- எண்ணை விற்பவன் உலகத்தாரிடம் சுரண்டிக் கொண்டு போன பணத்தை அமெரிக்கன் நச்சு வீட்டு மனை கடன் அடகுப் பத்திரம் விற்று அடித்துப் போய் விட்டான். கச்சா எண்ணையையும் எக்கச் சக்கமாக சேமித்துக் கொண்டிருக்கிறான் அமெரிக்கன்.
- நம் நாட்டில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வங்கிகள் இருப்பதால் ஓரளவு அவற்றின் ஆரோக்கியம் பாதுகாக்கப் பட்டிருக்கிறது.
- இதையும் மீறி நச்சுப் பத்திரச் சந்தையில் நம் ஓரிரு வங்கிகள் தலையைக் கொடுத்திருப்பதாக செய்தி அடிபட்ட வண்ணம் இருக்கிறது. கில்லாடிகள்!!
- நம்மூரில் வங்கிகள் ஒரு ரூபாய் வைப்புக்கு சுமார் 60 பைசா அளவில் ரொட்டேஷனில் (கடன்) விட்டுப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றால் அமெரிக்காவில் ஒரு டாலருக்கு 98 சென்டுகளையும் ஐரோப்பாவில் ஒரு யூரோவிற்கு 1.4 யூரோக்களையும் ரொட்டேஷனில் விடுகிறார்களாம். முதலாளித்துவம் வாழ்கிறது.
- "உள்ளதற்கே பணம் இல்லை இதில் இந்தியப் பங்குச் சந்தை முதலீடு ஒரு கேடா" என்று வீட்டுக்குப் போனால் பெண்டாட்டி இடிக்கிறாளாம்!?அதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களெல்லாம் இந்தியப் பங்குச் சந்தையை விட்டு வெளியேறிக் கொண்டேயிருக்கிறார்கள். டாலரின் தேவை வெகுவாக ஏறிப் போய் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 50 ஐ ஏறக்குறையத் தொட்டுவிட்டது.
No comments:
Post a Comment