Monday, September 29, 2008

தமிழகத்தில் குழந்தைகள் நாடாளுமன்றம்

நாகர்கோவிலைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்று தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த முப்பது குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து குழந்தைகள் நாடாளுமன்றம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள். 

தொழிலாளர்கள் நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி தலைமையில் குழந்தைகள் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.  

இந்த நாடாளுமன்றத்தில் முதலமைச்சர், இணை முதலமைச்சர், மற்றும் ஏனைய அமைச்சர்கள் உள்ளனராம். ஏற்கெனவே இந்தப் படை, சில மதுக்கடைகளை அவர்கள் முயற்சியால் மூட வைத்து விட்டார்களாம்.  

இணை அமைச்சர் ஜீன்ஸ் அணிந்து அவைக்கு வந்தாராம், ஜீன்ஸ் அவை வரைமுறைக்கு ஏற்ற உடை இல்லை என்று தீர்மானம் போட்டு அவைக்கு ஏற்ற உடைகள் இன்னவைதாம் என்றும் தீர்மானம் போட்டு விட்டார்களாம். 

குழந்தைகள் சமூகப் பாடங்கள் மற்றும் அரசியலமைப்பைக் கற்றுக் கொள்ள இதை விட சிறந்த வழி தெரியவில்லை. யோசித்து செயல் படுத்தியிருப்பவர்களை பாராட்டியே தீர வேண்டியிருக்கிறது!

No comments:

Blog Archive