போயிங் 747 ஜம்போ விமானம் உண்மையிலேயே மூக்கில் விரல் வைத்து வியக்கக் கூடிய தொழில் நுட்ப அற்புதம். அது டன் கணக்கில் பயணிகள், அவர்தம் உடமைகள் ஏற்றிக் கொண்டு தரையிலிருந்து மேலெழும்புவதும், கம்பீரமாக ஆட்டம் அசைவில்லாமல் பறப்பதும், பொத்தினாற் போல் தரையிறங்குவதும் பார்க்கப் பார்க்க அதிசயம்.
அவற்றில் ஒன்று நேற்று அடி வயிற்றில், வலது இறக்கைக்குக் கீழே கிழிந்து போய், விமான ஓட்டிகளின் திறமையால், 6000 மீட்டர் (சுமார் 20000 அடி) உயரத்தைச் சடுதியில் தொலைத்த விபரீதத்தில் இருந்து தப்பித்து, பத்திரமாகத் தரையிறக்கப் பட்டிருக்கிறது. பயணிகள் அனைவரும் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் பிலிப்பைன்ஸ் நாட்டில் தரையிறங்கி விட்டனர்.
நாமெல்லாம் சென்னை வீதியில் ஆட்டோக்காரன் நம் காரில் கீறி விட்டு ஓடி விட்டால் இறங்கி வந்து கீறலை வெறிப்பதைப் போல விமானி அவரது 747 விமானத்தில் ஏற்பட்ட 'கீறலை' வேடிக்கை பார்ப்பதை படத்தில் காண்க ...
இத்தகைய திறமைக்கு நேர் எதிர் மாறாக நம் நாட்டில் நேற்று ஒரு போயிங் விமானத்தின் பின் கதவை சரியாக மூடாமல் பயணிகளை வைத்துக் கொண்டே வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார்கள்.
1 comment:
/
இத்தகைய திறமைக்கு நேர் எதிர் மாறாக நம் நாட்டில் நேற்று ஒரு போயிங் விமானத்தின் பின் கதவை சரியாக மூடாமல் பயணிகளை வைத்துக் கொண்டே வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார்கள்.
/
:)))))))))
Post a Comment