Saturday, December 17, 2005

பார்வை ஒன்றே போதுமா !!

கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் அமெரிக்காவின் ·பார்ச்சூன் (Fortune) நிறுவனங்களான இண்டெல், சிஸ்கோ, மைக்ரோஸா·ப்ட் போன்றவற்றின் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

இவர்கள் இந்திய அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசி அவர்களைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் போட்டா போட்டியுடன் தங்கள் நிறுவனத்தின் எதிர்கால இந்திய முதலீடுகளைப் பற்றிப் பேசிப் போயிருக்கிறார்கள். எவரும் ஒரு பில்லியன் டாலருக்குக் குறைவாகப் பேசவில்லை.

இவர்கள் ஏன் இந்தியாவின் பக்கம் தங்கள் பார்வையைத் திடீரெனத் திருப்பியிருக்கிறார்கள்?

இந்தியச் சந்தையின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றிய அவர்கள் எதிர்பார்ப்பு ஒரு முக்கியக் காரணம்.

ஆனால் இத்தனை நாள் சீனாவின் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தனர் பல அமெரிக்கத் தொழில் நுட்ப நிறுவனத் தலைவர்கள். சீனாவில் வளர்ச்சி விகிதம் திடீரென்று குறைந்து விட்டதா என்றால் அது இல்லை காரணம்.
  • சீனாவில் வர்த்தகத்தின் மற்றும் தொழில் துறைகளின் மேல் அரசின் கட்டுப்பாடு அதிகம்
  • ஒரு தொழில் நுட்பத்தை சீனாவில் அறிமுகப் படுத்தினால், சீன மண்ணின் மைந்தர்கள் சீன நிறுவனங்களை ஆரம்பித்து தொழில் நுட்பங்களை ஈயடிச்சான் காப்பியடித்து அவற்றை அமெரிக்காவிலேயே விற்றுத் 'தண்ணி' காட்டி விடுகிறார்கள்
  • சீன அரசும் காப்பியடிப்பதைக் கண்டுகொள்ளாமல், எரிகிற தீயில் எண்ணையை வார்ப்பது போல் இத்தகைய 'மண்ணின மைந்தர்' நிறுவனங்களுக்குப் பல மான்யங்களும் சலுகைகளும் அளிக்கின்றன.

இவற்றால் சீன நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்களால் போட்டி போட முடியவில்லை.

இத்துடன் சேர்ந்து கொண்டு இந்தியாவில வளர்ந்து வரும் மத்திய வர்க்கம், அரசின் வளர்ந்து வரும் transparency, வளரும் தொழில் திறன் ஆகியவை அமெரிக்க நிறுவனர்களின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளன.

முதலீட்டு அறிவிப்புகளை கவனத்தை ஈர்ப்பதற்கும், நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கும் மட்டும் உபயோகப் படுத்தாமல் உண்மையிலேயே இந்தியாவில் இவர்கள் முதலீடு செய்தால் இந்தியாவிற்கு நல்லதுதான்.

அறிவித்துள்ள முதலீடுகள் அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டு காலத்தில் செய்யப் படத் திட்டமிடப் பட்டிருப்பதால் அவை எப்போது வரும் என்பதும், சொன்னபடி சொன்ன அளவில் இந்த நிறுவனங்கள் முதலீடு செய்கின்றனவா என்று கண்காணிக்க முடியுமா என்பதும் வலுவான சந்தேகங்கள்.

நடுவில் நம் அரசியல்வாதிகள் வேறு கேள்விக்குப் பதினைந்தாயிரம் ரூபாய் என்று விலை நிர்ணயித்து சீன மைந்தர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களல்ல என்று வியாபாரம் பண்ணியிருக்கிறார்கள்.

3 comments:

நண்பன் said...

அரசியல் வாதிகள் முன்பை விட இப்பொழுது சற்று அடக்கியே வாசிக்கிறார்கள் என்பது உண்மை.

கருப்பு ஆடுகள் சகல இடங்களிலும் இருக்கின்றன என்றாலும், ஆட்சி அமைப்பு முறையை இன்னமும் ஒளிவு மறைவற்றதாக ஆக்கிவிட்டோமென்றால் - அதுவே அரசியல் வாதிகளின் ஊழலை மேலும் சிரமமாக்கி குறைத்து விடும்.

என்றாலும் வந்து போகிறவர்கள் எல்லோரும் வெறுமனே utility industry ஆக எதிர்காலத்தில் மாறிவிடும் மென்போருளையே விரும்புகிறார்கள். நமக்கு தேவை - எளிய மக்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் தொழிற்சாலைகளிலும் முதலீடு. உதாரணமாக ஒரு கனரக தொழிற்சாலை வருகிறதென்றால், அதைத்தொடர்ந்து வரக்கூடிய, சிறிய சிறிய பட்டறைகள், போக்குவரத்து வாகன வேலை வாய்பொபுகள், என்று பலவும்...

இந்த விதமான முதலீடுகளே இல்லையே?

ந. உதயகுமார் said...

நீங்கள் கூறுவது மிகச் சரி. அந்த மாதிரி முதலீடுகளும் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. போஸ்கோ, வோக்ஸ்வாகன், ஹ்யுண்டாய் முதலியவற்றின் இந்திய வளர்ச்சித் திட்டங்கள் பெரியவை.

அவற்றை நீங்கள் குறிப்பிட்ட கணக்கில் சேர்க்கலாம்.

ஆயினும்

1. இந்தியப் பொருளாதாரத்தின் பெரும்பங்கு வகிக்கும் துறை விவசாயத் துறை. அந்தத் துறையில் முதலீடுகள் அதிகரித்தால் சாதாரண இந்தியனின் வாழ்க்கைத் தரம் உயரும். அதிகரிக்க வேண்டுமென்றால் ரீடெய்ல் (Retail) துறையில் அந்நிய முதலீடுகள் அவசியம்.

2. வேலை வாய்ப்பு வேண்டுமென்றால் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு உகந்த வேலை வாய்ப்புக்காகக் காத்திருத்தல் ஒரு வகை. மற்றொரு வகை, கிடைக்கும் வேலை வாய்ப்புக்களுக்குத் தன்னைத் தயார் படுத்திக் கொள்வது. இந்தியாவில் இரண்டாம் வகை முயற்சிகளும் தேவை.

Anonymous said...

The foreigners should not believe fully our politicions they were laterly blackmailed by their political ground and expecting pribes and donation to swallow in the name of public.

Blog Archive