Sunday, October 02, 2005

மஹாத்மாவின் எளிய பொருளாதாரச் சிந்தனைகள்

எளிமை மிகுந்த காந்தி பிறந்த இந்நாளில் காலத்தால் அழியாத அவரது பொருளாதாரச் சிந்தனைகள் சில:

  1. "இயற்கை அனைத்து மனிதர்களின் ஆதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வல்லது. ஆனால் சில மனிதர்களின் பேராசைத் தேவைகளுக்கு அதனிடம் ஆதாரம் கிடையாது". சுற்றுச் சூழல் பாதிக்கப் படாத அவர் வாழ்ந்த நாட்களில் கூட அவர் வாக்கில்தான் எவ்வளவு தொலைநோக்கு?
  2. பொருளாதாரம் வளர்ந்தால் அதன் விளைவுகள் ஒரு நாள் ஏழைகளைச் சென்றடைந்து அவர்கள் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்ற இன்றைய கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் அவர். "ஏழைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழி செய்யும் கொள்கைகளே பொருளாதார வளர்ச்சியின் அஸ்திவாரம்" என்ற கருத்தை வலியுறுத்தியவர்
  3. கிராமப் புற வளர்ச்சியைப் பற்றிய அவரது கருத்துகள் மிக எளிமையானவை. "கிராமப் புறத்தில் வாழும் ஒருவர் கைக்கடிகாரம் போன்ற பொருட் தேவைகளுக்கு இறக்குமதி செய்யப் பட்ட பொருட்களை நாடலாம். ஆனால் ஆதாரத் தேவைகளான உடுத்தும் துணி போன்றவற்றை வாங்க தன் கிராமத்தின் உழைப்பையே நம்பியிருக்க வேண்டும். மிஞ்சிப் போனால் அடுத்த கிராமம் வரை அவர் செல்லலாம்" என்றவர் அவர். அவர் கூறும் வகையில் ஆதாரத் தேவைகளில் தன்னிறைவு பெற்ற கிராமங்கள் இன்றைய உலகமயமாக்கல் கொள்கைகளால் அதிகம் பாதிக்கப் பட மாட்டா!
  4. தனிமனிதனின் தேவைக்கதிகமாக செல்வம் மிகுந்த கவனத்துடன் ஏழைகளின் மேம்பாட்டிற்காக செலவிடப் படவேண்டும். அதுவே அத்தகைய செல்வத்தின் அதி உன்னத உபயோகம் என்று நம்பியவர் அவர்
  5. பரஸ்பர நல்லெண்ணத்துடனும், சேவை நோக்கத்துடனும் மனிதர்கள் கூட்டாகச் சேர்ந்து செய்யும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பியவர் அவர்

எளிய வாழ்க்கையை வாழ்ந்தும் காட்டிய அவரது இந்த எளிய சிந்தனைகள் இந்த நாளிலும் பயன் படுபவை.

5 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Udayakumar,

Could you differentiate "Gandhian economy" from "Communist economy" ?

ஜெ. ராம்கி said...

Udyakumar,

Good effort. Keep it up!

Unknown said...

Nalla Karruthukal Udhya Kumar.

Nandri.

Anbudan,
Natarajan.

Voice on Wings said...

//# பொருளாதாரம் வளர்ந்தால் அதன் விளைவுகள் ஒரு நாள் ஏழைகளைச் சென்றடைந்து அவர்கள் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்ற இன்றைய கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் அவர். "ஏழைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழி செய்யும் கொள்கைகளே பொருளாதார வளர்ச்சியின் அஸ்திவாரம்" என்ற கருத்தை வலியுறுத்தியவர்//

இது ஒரு முக்கியமான கருத்தாகத் தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம் நீங்கள் பதிவுகள் இடுவதில்லை?

Blog Archive