ஹெச். ஏ. எல் 1940 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. முதன் முதலில் மிதவை வானூர்தி (Glider) ஒன்றை வடிவமைத்து தயாரித்தது. இன்றோ தொழில் நுட்பத்தின் வெட்டுவாயில் உள்ள சிறந்த பல வானூர்திர்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
உதாரணத்திற்குச் சில:
- ஹான்ஸா - இது இரண்டு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானம்
- துருவ் - முன்னணித் தொழில் நுட்பம் கொண்ட இலகு ரக ஹெலிகாப்டர் விமானம்
- இலகு ரக போர்விமானம் - எளிதாகப் பலமுறை வானில் உருண்டு சாகஸங்கள் புரிய வல்லமை உள்ள போர் விமானம்
- இடைநிலை ஜெட் பயிற்சி விமானம்
- சாராஸ் - பதினான்கு இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானம். இந்தியாவின் மிகச் சிறிய நகரங்களுக்குப் பயணம் செய்யக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த முறையில் உற்பத்தித் திறன் மற்றும் தொழில் திறன் முன்னேற்றத்திற்குத் தேவையான உக்கிகள் இல்லாமையால் ஹெச். ஏ. எல் நிர்வாகிகளின் வேண்டுகோளின் படி அரசு ஹெச். ஏ. எல் தன் பாட்டைத் தானே பார்த்துக் கொள்ளும் வகையில் வணிக அமைப்பை அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தது.
என். ஏ. எல் (நேஷனல் ஏரோநாடிகல் லாபோரடரீஸ்), எடா (ஏரோநாடிகல் டி·பன்ஸ் ஏஜென்ஸி) போன்ற அமைப்புகளும் ஹெச். ஏ. எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் துணையான ஆய்வுகள் செய்தல், வடிவமைப்பு, கட்டமைப்பு, பயிற்சி, மற்றும் சோதனைக் கருவிகள் முதலியன செய்வதில் மிக முன்னேறிய நிலையில் உள்ளன.
தனியார் துறையில் தனேஜா என்ற இந்திய நிறுவனம் வானூர்திகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. மற்ற தனியார் துறை நிறுவனங்களான ஹெ.சி.எல், விப்ரோ, இன்·போஸிஸ், கேட்டெஸ் (CADDES), க்வெஸ்ட் (Quest), சில்வர் ஸா·ப்ட்வேர், சி.எம்.எஸ் சா·ப்ட்வேர் போன்றவை தொழில் நுட்பச் சேவைகள் வழங்கும் துறையில் உள்ள சில முக்கிய நிறுவனங்கள்.
இவை உலகின் புகழ் பெற்ற வான்வெளித் தொழில் துறை நிறுவனங்களான போயிங். ஏர் பஸ், ராக்வெல் காலீன்ஸ், ஹாமில்டன் சன்ஸ்ட்ராண்ட் போன்ற அந்நிய நிறுவனங்களுக்குச் சேவைகள் வழங்குகின்றன.
இந்தச் சேவைகளை இரண்டு வகையாக வகைப் படுத்தலாம்.
- முதல் வகைச் சேவைகள் விமானத்தின் வடிவமைப்புப் பணிகளுக்கும், கட்டமைப்புப் பணிகளுக்கும் துணைபோகும் (enabling) தொழில் நுட்பங்களைக் கொண்டு வழங்கப் படுபவை. கணினி உதவியுடன் வடிவமைத்தல் மற்றும் கட்டமைத்தல் (CAD/CAM) இதில் மிக முக்கியமான சேவை. இந்தியச் சேவை நிறுவனங்கள் இவ்வகைச் சேவைகளை வழங்குவதில் முன்னணி நிலையை எட்டியுள்ளன.
- இரண்டாம் வகைச் சேவைகள் விமானத்தினுள் பொருத்தப்படும் (embedded) தொழில்நுட்பங்களைத் தயாரிக்கும் அல்லது சோதனை செய்து தரும் சேவைகள். ஹெச். சி. எல் போன்ற நிறுவனங்கள் இந்தத் துறையில் பிரகாசிக்கின்றன.
ஆபத்து அதிகமுள்ள உயர் மட்டத்தில் விமானத்தின் ஜெட் விசைகளை இயக்கும் தொழில் நுட்பங்கள், விமானம் பறப்பதைக் கட்டுப் படுத்தும் தளங்களை இயக்கும் தொழில் நுட்பங்கள் அடங்கும்.
இருக்கையில் பொருத்தப் பட்டிருக்கும் தொலைக்காட்சித் திரை, இருக்கையில் சங்கீதம் வழங்கும் அமைப்பு முதலியவை ஆபத்து குறைவான அடி மட்டத்தில் சேரும்.
குளிர்சாதன வசதி, விமானத்தினுள் புகை வந்தால் கண்டு பிடிக்கக் கூடிய கருவிகள் இடைப்பட்ட மட்டங்களில் அமையும். கீழுள்ள மூன்று தட்டுகளில் சேவைகள் வழங்கும் இந்திய நிறுவனங்கள் இன்னமும் மேல் தட்டை எட்டவில்லை.
உலகின் வான்வெளித் தொழில் துறைச் சந்தையின் அளவை சுமார் 1300 ட்ரில்லியன் (9 பூஜ்யங்கள்) டாலர்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். இதில் 75 சதவிகதம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் தற்காப்புக்காகவும், ராணுவச் சேவையின் தேவைகளுக்காகவும் செலவிடும் பணமாகும்.
இந்தியச் சேவை நிறுவனங்கள் இந்த வட்டத்திற்குள் இன்னமும் கால் வைக்க முடியவில்லை. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் இந்த வட்டத்திற்குள் சேவைகள் வழங்க, முழுதும் அமெரிக்கக் குடிமக்களைக் கொண்டு அமெரிக்க மண்ணில் இயங்கும் நிறுவன அமைப்பு ஒரு கட்டாயத் தேவை. க்வெஸ்ட் என்ற ஒரு இந்திய நிறுவனம் மட்டும் இதில் ஒரு படி முன்னேறியிருப்பதாகக் கேள்வி.
சுமார் 150 மில்லியன் டாலர் அளவாகத் தற்போது மதிப்பிடப் பட்டிருக்கும் இந்திய வான்வெளித் தொழில் நுட்பச் சேவை வழங்கும் சந்தை, இன்னமும் ஐந்து வருடங்களில் 1 பில்லியன் டாலர் அளவிற்கு வளரும் என்று தெரிகிறது.
இஸ்ரோ (ISRO) நிறுவனம் செயற்கைக் கோள் மற்றும் தொலையுணர்வுத் தொழில் துறையில் இயங்கினாலும், வானூர்தித் தொழில் துறைக்குப் பலவகைகளில் உறுதுணையாக இருந்திருக்கிறது.
அரசு, தனியார் துறைகள் அனைத்தும் வளர்ச்சியும் தேர்ச்சியும் பெற்று, தொழில்களுக்கிடையே ஆரோக்கியமான இணைப்புகளும், ஒருங்கிணைப்புகளும் தேவையான அளவில் உருவாகி, சேவைகள் ஏற்றுமதியிலும் நல்ல வளர்ச்சியை எதிர் நோக்கியிருக்கும் இந்தத் துறை மேலும் சிறந்து வளர அரசின் கொள்கைகள் தொலைநோக்குடன் அமைவது மிக முக்கியம். அதே போல் தனது தேவைகளுக்கு வெளி தேசங்களுக்குச் செல்லாமல் இந்தியாவின் உற்பத்தியை நம்பி அதன் மேம்பாட்டிற்குப் பாடுபடுவதும் அரசின் கடமைகளில் ஒன்று.
No comments:
Post a Comment