Saturday, June 18, 2005

இருவகை மென்பொருள் தயாரிப்பு அமைப்புகள்

தனி உரிமை (Proprietary) மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆணித்தரமான உதாரணம் மைக்ரோசா·ப்ட். அதே போல திறந்த மூல (Open Source) அமைப்பில் வெளிவரும் மென்பொருளுக்குச் சிறந்த உதாரணம் லைனக்ஸ் (linux). மற்றொரு உதாரணம் விக்கீபீடியா.

1993 ஆம் ஆண்டில் மார்க் எவிங்க் (Mark Ewing) என்பவர் ரெட்ஹாட் சா·ப்ட்வேர் (RedHat Software) என்ற நிறுவனத்தை உருவாக்கினார். ஐ.பி.எம் (IBM), இன்டெல் (Intel), டெல் (Dell), ஒராக்கிள் (Oracle) போன்ற நிறுவனங்கள் ரெட் ஹாட்டின் முக்கிய இணை நிறுவனங்கள். இந்த நிறுவனம் லைனக்ஸ் மென்பொருளை சந்தைக்கு வினியோகம் செய்து அதன் பயனர்களுக்குத் தேவையான ஆதரவை அளிக்கிறது.

ரெட் ஹாட் கடந்த சில வருடங்களாக சீராக வளர்ந்து வருகிறது. மைக்ரோஸா·ப்டின் வருட வருமானம் சுமார் 35 பில்லியன் டாலர் அளவைத் தாண்டி விட்ட போதும் அதன் வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது.

இரண்டு வகை மென்பொருள் தயாரிக்கும் அமைப்புகளிலும் நன்மைகளும் உள்ளன, சிக்கல்களும் உள்ளன. கீழே அவை பட்டியலிடப் பட்டிருக்கின்றன.






லைனக்ஸ் இன்று அலைபேசி முதல் மெயின் ·ப்ரேம் வரை பல வகைக் கணினிகளை இயக்குகிறது. மைக்ரோசா·ப்டின் விண்டோஸ் மென்பொருளை விட அதிவேகமாக இயங்குகிறது. அதன் மூலம் (Source) பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. விண்டோஸ் மென்பொருள் லைனக்ஸிடம் கடும் போட்டியைச் சந்திக்கும் நிலைமை வலுத்துக் கொண்டே போகிறது. ரெட் ஹாட் மைக்ரோஸா·ப்ட் அளவிற்கு ஒரு நாள் வளரும் பட்சத்தில் அது மைக்ரோசா·ப்டைப் போலவே மாறக் கூடும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

(P.S: சரியான கலைச் சொற்களை இங்கு உபயோகிக்கத் தவறியிருந்தால் சுட்டிக் காட்டினால் கற்றுக் கொள்வேன்.)

7 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உதயகுமார், பொதுவாக உங்கள் பதிவுகள் நன்றாகவே இருக்கின்றன.

இந்த முறை ஒரு தவறு இருக்கிறது. ரெட் ஹேட் பற்றி நீங்கள் சுட்டிய விக்கிபீடியாவிலேயே பார்க்கலாமே.
http://en.wikipedia.org/wiki/Red_Hat

இந்த மூன்று நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதல்ல ரெட் ஹேட்.

>> ஐ.பி.எம் (IBM), இன்டெல் (Intel), டெல் (Dell) நிறுவனங்கள் இணைந்து சில வருடங்களுக்கு முன் ரெட்ஹாட் சா·ப்ட்வேர் (RedHat Software) என்ற நிறுவனத்தை உருவாக்கினார்கள். >>

இராதாகிருஷ்ணன் said...

பதிவு நன்றாக உள்ளது. open source-ற்கு திறமூலம், திறவூற்று என்ற சொற்களும், interface-ற்கு இடைமுகம் என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளன (இணையத்தில்).

ந. உதயகுமார் said...

செல்வராஜ்: உங்கள் நேரத்திற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

தவறைச் சுட்டிக் காட்டியதற்கு வந்தனம். பதிவை சரியான தகவல்களுடன் திருத்தி விட்டேன்.

சிரமத்திற்கு அனைவரும் மன்னிக்கவும்.

- உதயகுமார்

ந. உதயகுமார் said...

திறமூலம், திறவூற்று என்று தமிழ் பதங்ளை சொல்லிக் கொடுத்திருக்கும் இணைய நண்பரே. நன்றி. பதிவில் அட்டவணையை வரைபடமாகத் தயாரித்திருப்பதால் அதை மாற்றுவதென்றால் பெரிய வேலை. ஆகவே இனி வரும் நாட்களில் சரியான பதங்களை உபயோகிப்பேன் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். நன்றி. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

கடந்த சில நாட்களாகவே பின்னூட்டம் இடுபவர் (தமிழ்) பெயர்கள் கேள்விக்குறிகளாகத் திரையில் காட்டப் படுகின்றன. உங்கள் பெயரும் அப்படித்தான் தெரிகிறது. பெயருடன் இணைந்திருக்கும் சுட்டியைச் சொடுக்கினால் பல சமயம் பின்னூட்டம் இடுபவர் பெயரைத் தெரிந்து கொள்ள முடியும். உங்கள் விஷயத்தில் அதுவும் முடியவில்லை. ஆகவே நீங்கள் இணைய நண்பர். மீண்டும் எனக்குக் கற்றுத் தந்ததற்குப் பல கோடி நன்றி.

- உதயகுமார்

இராதாகிருஷ்ணன் said...

உதயகுமார், சில நாட்களாகவே ப்ளாக்கரில் பெயர்கள் கேள்விக் குறிகளாகிவிட்டன. பெயர் விவரங்களைத் தெரிவிக்கும் பக்கத்தைக் காணும்படி செய்துவிட்டேன், சுட்டியமைக்கு நன்றி!

-இராதாகிருஷ்ணன்

மாயவரத்தான் said...

உதயகுமார்.. வக்கமான உங்கள் எளிய நடையில் ஒரு சூப்பர் பதிவு.

அது சரி இராதாகிருஷ்ணன்... எப்படி மாத்தினீங்க?!

இராதாகிருஷ்ணன் said...

மாயவரத்தான், நான் காணும்படி செய்தது Profile பக்கத்தை மட்டுமே, கேள்விக் குறிகளாக நிற்கும் பெயர்களை அல்ல. :-(

Blog Archive