Saturday, February 12, 2005

சுதந்திரத்தின் மதிப்பை உலகிற்குக் கற்றுத் தருவோம்

அமெரிக்க அதிபர் திரு. ஜார்ஜ் புஷ் அவர்கள், தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தின் துவக்கவிழாவில், "சுதந்திரத்தின் மதிப்பை உலகிற்குக் கற்றுத் தருவோம்" என்று கூறினார்.

ஈராக்கில் ஆக்கிரமிப்பும், அங்கு மக்களுக்குக் ஏற்பட்டிருக்கும் நிம்மதியின்மையும், அபு க்ராயிப் நிகழ்வுகளும், க்யுபாவின் க்வாட்டனாமோ போன்ற அமெரிக்க ராணூவ தளங்கள் உள்ள பகுதிகளில், மண்ணுக்குச் சொந்தமானோர் நடத்தப் படும் விதமும், உலகின் நாளிதழ்களாலும், பத்திரிக்கைகளாலும், கிழி கிழியென்றுக் கிழிக்கப் பட்டு வருகின்றன.

இதுதானா அமெரிக்காவிற்குப் புரிந்த சுதந்திரம் என்று கேட்கத் தோன்றுகிறது.


நானும் என் மகனும் இந்த கருத்துக்களை விவாதித்துக் கொண்டிருந்தோம். இரண்டு நாள் சென்ற பின் அவன் எனக்கு வரைந்து காட்டிய படம் கீழே !!!



Cartoon courtesy: ரா. உ. கணேஷ் குமார்

No comments:

Blog Archive