அடிப்படை மருத்துவ வசதிகளை அனைவருக்கும் (முக்கியமான ஏழைகளுக்கு) அளிப்பதில் அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
நவீன மருத்துவம் தனியார் வசம் இருக்கலாம். வசதியுள்ளோர், தேவைப்பட்ட பொழுது நவீன மருத்துவத்திற்குச் சற்று அதிகம் செலவு செய்யத் தயங்க மாட்டார்.
ஆகவே, அரசு போதிய பணத்தை அடிப்படை மருத்துவ வசதிகளைப் பெருக்கச் செலவு செய்யவேண்டும்.
அப்படிச் செலவு செய்யப்படும் பணம் சரியானபடி மக்களுக்குப் போய்ச் சேருகிறதா என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
- அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் பணிக்கு வருவதிலும், நோயாளிகளைக் சரிவர கவனிப்பதிலும் இருக்கும் ஒழுங்கீனங்களைச் சரி செய்வது முக்கியம்.
- மருத்துவர்கள், நோயாளிகளைத் தங்கள் சுயநன்மைக்காக தங்கள் தனி மருத்துவமனைகளுக்குச் செல்ல கட்டாயப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
- போலி டாக்டர்களை அரசு இனம் கண்டு கட்டுப்படுத்த வேண்டும்.
இவைகளைச் செய்தாலே அரசால், நாட்டில் ஏழைகளுக்குப் பல பிணிகளிலிருந்து தீர்வளித்து, அவர்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்ள உதவ முடியும், என்று அவர் கருத்துக் கூறியுள்ளார்.
தனக்கு வந்திருக்கும் நோயின் தன்மையை அறிந்து கொள்ள முடியாததும், அவற்றைச் சடுதியில் சரிவர தீர்த்துக் கொள்ள இயலாமையும், ஏழைகளின் துயரத்தை அதிகரித்து, அவர்கள் வாழ்க்கைத்தரத்தைப் பெரிதும் குறைக்கின்றன.
No comments:
Post a Comment