அதிபரின் முதல் உரையில் "உலகை வழி நடத்த அமெரிக்கா மீண்டும் தயாராகி விட்டது" என்றார். மிகவும் ஆழமான வார்த்தைகள். முந்தைய அதிபரின் எதிரிலேயே இந்தக் கருத்தை (இம்சைப் படுத்தாமல்) ஆனால் தைரியமாகச் சொன்னதன் மூலம் உண்மையை மாபெரும் சபையில் ஒப்புக் கொண்டு, தன்னைத் தானே ஏற்றுக் கொண்டிருக்கும் பெரும் பொறுப்பிற்குள் ஆழ்த்திக் கொண்டார்.
மேலும் 'விடுதிகளில் சமமாக அமர்ந்து சாப்பிடக் கூடிய உரிமை மறுக்கப் பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் இங்கே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு இந்த நாட்டில் மாற்றம் மலர்ந்திருக்கிறது' என்று சொல்லி வெள்ளையர், கறுப்பர் என்று மாறுபாடில்லாமல் வானளாவிய கரவொலியைப் பெற்றார்.
தனது பதினெட்டு நிமிட முதல் உரையில் பொருளாதாரப் பிரச்சினை, ஈராக், ஆப்கானிஸ்தான், சுற்றுச் சூழல் பிரச்சினை அனைத்தையும் தொட்டார்.
முந்தைய அதிபர் விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்ததுடன் பெருந்தன்மை மற்றும் பொறுப்பான புன்னகையுடன், கையில் இருந்த அத்தனை அதிகாரத்தையும் அமைதியாக கைமாற்றி விட்டு, ஆட்டுக் குட்டி போல் ஹெலிகாப்டரில் கிளம்பி விட்டார். நம்ம ஊரில் நடக்குமா?
1 comment:
பத்வியேற்பா. எதிர் கட்சிகாரனோட சொந்தகாரன் வீட்டு கல்யாணத்துக்கு போனாலே கட்சியை விட்டு கல்தா.. {இது அம்மா ஸ்டைல்}
அட நீங்க வேற...
ஆனா எங்க அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...
Post a Comment