மனிதர் இன்று பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு "மும்பைத் தீவிரவாதத்திற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் மேல் பாகிஸ்தான் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்தியா பாகிஸ்தான் மேல் விமானப் படையை ஏவுவதை யாரும் தடுக்க முடியாது" என்று அந்தத் தலைவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். மேலும், "மன்மோகனைப் பார்த்துப் பேசினேன். அவர் மிகவும் கோபமாக இருக்கிறார்" (ஒருவேளை கிண்டல் தொனியில் சொல்லியிருப்பாரோ?!) என்றும் சொல்லியிருக்கிறார்.இந்தியத் தலைகள் இப்படிப் பேசியதாக இதுவரை நான் கேள்விப்படவில்லை. தீவிரவாதத்தில் பாகிஸ்தானுக்கு பங்கு இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றுதான் எல்லோரும் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
நம் தலைவர்கள் படை பலத்தை உபயோகிப்பதைப் பற்றி இப்படி வெளிப்படையாகப் பேசாத பட்சத்தில் மக்கெய்ன் செய்வது அதிகப் பிரசங்கம். தனது போர்ச் சிந்தனைகளை இந்தியாவின் மேல் திணிக்க அவருக்கு உரிமை இல்லை. அவரது வயதுக்கு மதிப்புக் கொடுக்க விரும்பும் நாம் அவர் பேச்சை கண்டிக்கவும் தவறமாட்டோம்.
1 comment:
ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு சந்தோசம், ரெண்டு நாடுங்க அடிச்சிக் கிட்டா யாருக்கு சந்தோசம்னு இந்த பதிவ படிச்சா வெளங்கிடும்
Post a Comment