இந்தப் படைப்பில் முதலில் கருத்தைக் கவர்வது, பிகாரில் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து அரைகுறையாய் படித்த ஒரு (அரவிந்த் அடிகாவின் கருத்துப் படி) அரைவேக்காட்டு இந்தியனின் மனப்பான்மையையும் கண்ணோட்டத்தையும் நாகரிக உலகில் வளர்ந்த ஒரு படித்த மனிதன் வெளிப்படுத்தியிருக்கும் துல்லியம்.
இரண்டாவது, கதையைச் செலுத்தியிருக்கும் எளிய நடை. மூன்றாவதாகப் பிடித்த விஷயம், மேலும் மேலும் படிக்கத் தூண்டும் வகையில் கதையைச் செலுத்தியிருக்கும் உயிருள்ள நடை.
இந்தக் கதையை சீன அதிபருக்குக் கடிதம் எழுதுவது போல ஏன் சொல்ல வேண்டும் என்பது பாதிப் புத்தகம் வந்திருக்கும் எனக்கு இன்னமும் புரியவில்லை. ஆனால் ஒரு இளக்காரத்துடனே ஆரம்பிக்கும் சீன அதிபருக்கான மரியாதை அத்தியாயத்திற்கு அத்தியாயம் தேய்ந்து கொண்டே போகிறது.
இந்தியாவில் கங்கையைச் சுற்றியுள்ளதெல்லாம் இருட்டு, கடல் சார்ந்த இடமெல்லாம் வெளிச்சம் என்று இவர் கூறியிருக்கும் கருத்து ஒத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. இருந்தாலும் இந்தக் கண்ணோட்டமும் ஒரு அரை வேக்காட்டு இந்தியனுடையதுதான், அரவிந்த் அடிகாவுடையது இல்லை என்று அவர் தப்பித்துக் கொள்ளலாம்.
இவர் பிகாரின் ஏழ்மை மற்றும் தரித்திரத்தை சித்தரித்திருக்கும் விதம் உண்மைக்கு சற்று புறம்பாக இருக்கிறது என்று அறிந்தவர் தெரிந்தவர்கள் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் சாதிப் பிரச்சினை, படிப்பறிவித்தலில் அரசு காட்டும் அலட்சியம், ஊழல், சோஷலிஸம் என்ற பெயரில் அரசியல்வாதிகளின் அட்டகாசம், நிலச் சுவான் தாரர்கள் ஏழைகளின் உழைப்பை உறிஞ்சும் கொடுமை முதலியவை இந்தக் கதையில் உணர்ச்சியுடன் சித்தரிக்கப் பட்டுள்ளன.
ஒன்று நிச்சயம். இந்தக் கதையைப் படிக்கும் எந்த வெளிநாட்டவனுக்கும் சராசரி இந்தியன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் அல்லன் என்ற எண்ணம் கண்டிப்பாக வரும். இது கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான மற்றும் உண்மையான கண்ணோட்டம் இல்லை என்பது என் கருத்து.
4 comments:
நான் இன்னிக்குதான் முடித்தேன். எனக்கு இந்த நாவல் ஒரு Booker Material மாதிரி தெரியவில்லை.
:(
//இந்தியாவின் சாதிப் பிரச்சினை, படிப்பறிவித்தலில் அரசு காட்டும் அலட்சியம், ஊழல், சோஷலிஸம் என்ற பெயரில் அரசியல்வாதிகளின் அட்டகாசம், நிலச் சுவான் தாரர்கள் ஏழைகளின் உழைப்பை உறிஞ்சும் கொடுமை முதலியவை இந்தக் கதையில் உணர்ச்சியுடன் சித்தரிக்கப் பட்டுள்ளன.
இவை அனைத்தும் The God of small thingsல் மிகவும் நன்றாக சித்தரிக்கப் பட்டிருந்தன.
விமர்சனத்துக்கு நன்றி !!!!
Thought of buying this, But Hindu Literary review saved me. Thanks for sharing!
Post a Comment