Sunday, February 27, 2005

உலகில் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஏன்?

1990 ஆம் வருடம், பொருளாதார மேதை அமரித்தியா சென் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டார். அதில் அவர், சீனா, இந்தியா உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகளில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விடத் தேவைக்குக் கீழ் குறைவாக இருப்பதனைச் சுட்டிக் காட்டினார். உலகில் இதனால் தேவைக்கு 450 கோடி எண்ணிக்கைக்குக் கீழ் பெண்கள் தொகை இருப்பதாகக் கருதப் பட்டது. இந்தத் பற்றாக்குறை எண்ணிக்கை பிறகு 280 கோடியாகத் திருத்தப் பட்டது.

இந்தக் கருத்து உலகில் மிகுந்த பரபரப்பையும் கவலையும் ஏற்படுத்தியது. பெண்களின் இறப்பு விகிதம் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும், பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் கருக் கலைப்பு, சிசுக்கொலை போன்ற கொடுமைகளே இறப்பு விகிதம் அதிகரிக்கக் காரணம் என்றும் பரவலாக நம்பப் பட்டது. இன்னும் நம்பப் படுகிறது.

ஆனால், சமிபத்தில் வேறு தடயம் கிடைத்திருப்பதால், இந்நிலைக்கு வேறு காரணங்களும் இருக்கக் கூடும் என்ற எண்ணம் வலுத்துக் கொண்டிருக்கிறது. ஹெபாடிடிஸ் பி (Hepatitis B or HVB) நோய்க்கிருமி தாக்கிய பெற்றோருக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பதாகக் கிடைத்திருக்கும் தடயமே அது.

ஆசியா, அலாஸ்கா, முந்தைய சோவியத் யூனியனின் சில பகுதிகளில் HBV இன் தாக்கம் அதிகமாக இருந்தது, இந்தப் பகுதிகளில் ஆண்கள் பிறப்பு எண்ணிக்கை பெண்கள் பெண்கள் பிறப்பு எண்ணிக்கையை விட மிகுந்து காணப் படுகிறது. பிரென்சு மற்றும் கிரேக்க தேச ஆய்வு முடிவுகள் இக் கருத்தை வலுப் படுத்துகின்றன. அமெரிக்காவில் குடியேறியவர்களில் HBV தாக்கம் அதிகமிருந்த பகுதிகளிலிருந்து வந்தவர்களுக்கு ஆண் குழந்தைகளே அதிகம் பிறந்தன என்று கண்டறியப் பட்டுள்ளது.

இந்தக் கருத்து இன்னும் விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப் படவில்லை.

HBV தடுப்பு மருந்தை உபயோகித்து இந்த நிலையைச் சீர் செய்ய முடியும். வேண்டும். (Thanks: BusinessWeek)

நம்மூரில், ஆண்பிள்ளை வேண்டி அல்லது பெண் வேண்டாம் என்று கருதி, ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்ளுதல், சீன முறை, ஜப்பானிய முறை போன்ற இயற்கை முறைகளை ஆண் சிசு கருத்தரிக்கக் கடைப்பிடித்தல், சட்ட விரோதமாகி விட்ட - ஸ்கானிங் முறையில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலைக் கண்டு கொள்ளுதல் மற்றும் பெண் சிசுக் கொலை, போன்ற முறைகளை இன்னமும் நாடும் தம்பதிகள், இந்தச் செய்தியைக் கேட்டால் தங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து கொள்ளும் வேகத்தில் HBV நோய்க்கிருமியை உடலுக்குள் செலுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள் என்று தோன்றுகிறதே !?

1 comment:

Oodam said...

appadiya sankathy

Blog Archive