Friday, October 15, 2004

உயர் வேக இணைய தள இணைப்புக் கொள்கை 2004

இந்திய அரசின் இணைய தள (Broadband) இணைப்புக் கொள்கை 2004 (http://www.dot.gov.in/) பல மாதங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய ஒன்று எனினும், வரவேற்கப் பட வேண்டிய சில அம்சங்களுடன், மற்றைய நாடுகள் ஏற்கெனவே கற்றுக் கொண்ட பாடஙகளைக் கருத்தில் அடக்கி, ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் வந்திருப்பதாகப் படுகிறது. மாதம் 500 ரூபாயில் உயர் வேக இணைய தள இணைப்பால் நகரங்களில் உள்ள கல்விக்கூடங்கள், மாணவர்கள், வர்த்தக அமைப்புகள், தொழில் துறைகள் மற்றும் வல்லுனர்கள் கண்டிப்பாகப் பயன் பெறுவர். அவர்கள் வாழ்க்கைத் தரமும் உயரும்.

கிராமங்களில் உள்ள இந்திய மக்களை இக்கொள்கை எப்படிப் பயன் பெறச் செய்யப்போகிறது?

2 comments:

ந. உதயகுமார் said...

டாடா 1 (Data One) என்ற பெயரில், பி.எஸ்.என்.எல். நிறுவனம், உயர்வேக இணையதள இணைப்புச் சேவையை பொங்கல் திருநாள் முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. வாழ்த்தி வரவேற்கிறோம்.

ந. உதயகுமார் said...

நேற்று எனது இல்லத்திற்கு உயர்வேக இணைப்பு வந்தே விட்டதய்யா !!!!!

போட்டிக் கம்பெனிகளும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கத் தொடங்கி விட்டனர். ஏர்டெல் நிறுவனத்தினர் கட்டணங்களை அறிவித்திருக்கிறார்கள்.

"சபாஷ்.. சர்ர்ரியான போட்டி!!"

Blog Archive